Tuesday, Jul 8, 2025

அக்கா நீங்க இல்லாமல் - ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

memorial jayalalithaa vksasikala
By Irumporai 4 years ago
Report

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரின் தோழி வி கே சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் அதிமுகவின் பொதுச் செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 5 ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனால் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அக்கா நீங்க இல்லாமல் - ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி | Vk Sasikala At Jayalalithaas Memorial

 இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி, கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

அதிமுக கொடி பொருந்திய காரில் மெரினா கடற்கரை வந்த சசிகலா தொண்டர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்திய பின் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் அவர் உறுதிமொழி ஏற்றார்.