அஇபுதமமுக - கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்த வி.கே.சசிகலா
வி.கே.சசிகலா புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார்.
சசிகலாவின் கட்சி பெயர், சின்னம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த விழாவில் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் வி.கே சசிகலா.

அப்போதே தனது கட்சி கொடியினையும் வெளியிட்டார். அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலான கொடியை அறிமுகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்று அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரையும் சசிகலா அறிவித்தார்.
இதன் சின்னம் தென்னத்தோப்பு எனவும் அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் அஇபுதமமுக போட்டியிடும் என அறிவித்துள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் ஆரமபித்த கட்சியில் எம்ஜிஆர் இணைந்தது போல், நானும் தொண்டர் ஆரம்பித்த கட்சியில் இணைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.