இது வேற லெவல் Combo...பிரபுதேவாவுடன் இணைந்த விஜய் சேதுபதி
பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் Wolf படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிங்கள் மால்டோ என்ற பாடலை பாடியுள்ளார்.
விஜய் சேதுபதி
இந்தியாவின் பல மொழி படங்களில் தற்போது பிஸியான நடிகராக நடித்து வரும் விஜய் சேதுபதி, பல படங்களில் மற்ற நாயகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், ஷாரூக் கான் என தொடர்ந்து இணைத்து நடித்து வரும் இவர் தற்போது, பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.

பிரபுதேவாவின் Wolf
நடன இயக்குனராக, நடிகராக பின்னர் இயக்குனராக பாலிவுட் வரை சென்ற பிரபுதேவா அவ்வப்போது தமிழ் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பிரபுதேவா தன்னுடைய 60-தாவது படத்தில் நடித்து வருகிறார். Wolf என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இதில் லட்சுமி ராய். விசிஸ்தா, அனுஷ்யா பரத்வாஜ், அஞ்சு குரியன், ரமேஷ் திலக், லொல்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த படத்தில் தான் தற்போது நடிகர் விஜய் சேதுபதி பாடகராக இணைந்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்து வரும் இந்த படத்தில், சிங்கிள் மால்ட் கும்பல் என்ற பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார். இந்த படத்தில் பாடல் பாடியிருப்பதன் மூலம் விஜய் சேதுபதி - பிரபுதேவா ஆகியோர் முதல் முறையாக பாடலில் இணைந்துள்ளனர். அண்மையில், படக்குழு விஜய் சேதுபதி பாடியிருக்கும் பாடலை வெளியிட்டுள்ளனர்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil