மணிமேகலை போட்ட Insta Post.. ஸ்டோரியில் பகிர்ந்த பிரியங்கா - ஷாக்கான நெட்டிசன்கள்!
தொகுப்பாளர் மணிமேகலை போட்ட போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிமேகலை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சின்னதிரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் வெடித்தது.அப்போது பிரியங்கா தன்னை வேலை செய்ய விடாமல் தடுப்பதாக மணிமேகலை போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தியது.
அதன் பிறகு குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை விலகினார். தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் பரவாக பேசப்பட்டது.ஆனால், மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
மாறாக, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இதுக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். ஜீ தமிழுக்கு போனதும் முதல் முறையாக மணிமேகலைஇன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
இன்ஸ்டா போஸ்ட்
அதில் அதில், என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன்.மக்கள் வழக்கம் போல உங்களுடைய சப்போர்ட் எனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதே நேரத்தில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விராட் கோலியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் "கெட்ட பையன் இந்த ஸ்டாருடா.. " என்ற பாடலை பயன்படுத்தி இருக்கிறார்.இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இது மணிமேகலைக்காக இல்ல.. கோலிக்காக என கமெண்ட் செய்து வருகிறனர்.