11 வயசுலயே அப்பா இழந்துட்டேன்....திடீரென மேடையில் கண்கலங்கிய விஜே பிரியங்கா..!!
விஜய் டிவி தொகுப்பாளினி விஜே பிரியங்கா சமீபத்திய நிகழ்ச்சியில் தான் தனது தந்தையை சிறு வயதிலேயே இழந்தது குறித்து தெரிவித்திருக்கிறார்.
விஜே பிரியங்கா
தற்போதைய தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் விஜே பிரியங்கா. விஜய் டிவியில் அறிமுகமாக தொடர்ந்து அந்த தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்து வரும் இவரின் கலகலப்பான பேச்சுக்களால் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
தற்போது பிஸியாக தொகுப்பாளராக பயணித்து வரும் பிரியங்கா தான், சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வருகின்றார். அந்நிகழ்ச்சியில் தற்போது அவர் தன்னுடைய அப்பாவை குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
11 வயசில் அப்பாவை இழந்தேன்
தான் தனது தந்தையை 11 வயதில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக இழந்ததாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தன் அம்மா தான் அப்பாவைப் போல் தன்னை பார்த்து கொண்டார் என கூறிய பிரியங்கா, எது நடந்தாலும் தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து ஆசிர்வதிப்பார் எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனு மித்ரா என்ற சிறுமி தனது ஆசைக்கு உறுதுணையாக இருந்த தந்தை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட நேர்காணலில் பங்கேற்று திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என கூறிய நிலையில் பிரியங்கா தனது வாழ்க்கை குறித்து சொல்லி அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறினார்.

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு : அதிரடியாக தூக்கப்படும் பிள்ளையானின் சகாக்கள் IBC Tamil

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

Daily rasipalan: ரிஷப ராசி உட்பட 4 ராசிகளுக்கு நினைச்சதெல்லாம் நடக்குமாம்.. உங்க ராசியும் இருக்கா? Manithan
