ஷேம் விஜய் சேதுபதி.. எச்ச டிவி - பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசிய பார்வதி

Vijay Sethupathi Bigg Boss VJ Parvathy
By Sumathi Jan 05, 2026 01:25 PM GMT
Report

பிக்பாஸ் தமிழ் 9 இல் இருந்து பார்வதி மற்றும் கமருதீன் என இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ்

இந்நிலையில், பார்வதி தற்போது சமூக வலைதளங்களில் அந்த நிகழ்ச்சியையும் அதன் தொகுப்பாளரையும் கடுமையாக விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேம் விஜய் சேதுபதி.. எச்ச டிவி - பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசிய பார்வதி | Vj Paaru Slams Bigboss Insta Story Viral

அந்தத் தொலைக்காட்சியை எச்ச டிவி எனச் சாடியுள்ளார். மேலும், தன்னைப் பின்தொடர்பவர் ஒருவர், "பிக் பாஸ் 9-ன் உண்மையான டைட்டில் வின்னர் நீங்கள் தான்" என்று பதிவிட்டதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து,

பார்வதி பதிவு

"ஜோக்கர்கள் இப்போது மனிதர்களாகி விட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். "Show runner is shame" என்று பதிவிட்டு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பாரு, கம்ருதீன் மேல தப்பே இல்லை - ஒரே போடுபோட்ட வியானா!

பாரு, கம்ருதீன் மேல தப்பே இல்லை - ஒரே போடுபோட்ட வியானா!

இந்த பதிவுகள் வைரலான நிலையில், பார்வதி மீது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகச் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.