பிறந்தநாளில் மணிமேகலை அறிவித்த சர்ப்ரைஸ் - குவியும் வாழ்த்துகள்
விஜே மணிமேகலை பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜே மணிமேகலை
சன் மியூசிக் மூலம் பிரபலமானவர் வி.ஜே மணிமேகலை. அந்த நிகழ்ச்சியில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார். பின் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்தார்.
ஆனால் கடந்த வருடத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். பின் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார். நேற்று மணிமேகலை தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தன்னுடைய பிறந்தநாளில் தனக்காக சினேகா கொடுத்த புடவையையும், நடிகை வரலட்சுமி கொடுத்த கூலிங் கிளாஸையும் போட்டு சில புகைப்படங்களையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இரவு மணிமேகலையின் கணவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்.
பிறந்தநாளில் சர்ப்ரைஸ்..
தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளில் நான் எதிர்பார்க்காத இன்னொரு பெரிய சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதை இந்த வார இறுதியில் சொல்கிறேன், ஒரு வாரம் காத்திருங்கள் மக்களே.. என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லை அவர் காதல் திருமணம் செய்துக்கொண்டதால் பேசாமல் இருந்த தந்தை பேசிவிட்டாரா? என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan
