இப்படி மாறிட்டாங்களே.. மணிமேகலை கர்ப்பம்? வைரலாகும் வீடியோ!
உடல் எடை அதிகரித்துள்ளதால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மணிமேகலை
பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வெளியேறிய காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமானதாக இல்லை. அதன் பிறகு தங்களின் ஃபார்ம் ஹவுஸ் கட்டுமான பணிகளில் மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும் பிஸியாக உள்ளனர்.
கர்ப்பம்?
இருவருமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அவ்வப்போது பல ஃபோட்டோக்களையும், வீடியோகளையும் பகிர்ந்து வருவது வழக்கும்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்திலும், மிகவும் தளர்வான ஆடைகளை அணிந்துள்ளார். அதோடு தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.