யூடியூப்ல தாங்க அதிக வருமானமே - விஜய் டிவி பிரபலம் பளீச்
தனது அதிகமான வருமானம் குறித்து விஜே மணிமேகலை பேசியுள்ளார்.
மணிமேகலை
கடந்த 2010-ஆம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019-ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.
வருமானம்
அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகயாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து, சமூகலைதளங்களில் ஆக்டீவாக தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது புதிய வீடு, கார், பைக் என செட்டில் ஆகியுள்ளார். அவரது சொத்து மதிப்பு பல கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் அவருக்கு அதிகமான வருமானம் வருவது விஜய் டிவியிலா அல்லது யூடியூப்பிலா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பளீச்சென யூடியூப் மூலம்தான் என்று பதிலளித்துள்ளார்.