பிக்பாஸ் வீட்டில் மண்டை உடைந்த பெண் போட்டியாளர் - ஷாக்கான ரசிகர்கள்...!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட முதல் போட்டியாளரே நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டிவிட்டார் ஜி.பி.முத்து. சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்துக்கென்று தனி ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
அடுத்த வாரம் நாமினேஷன்
ஆனால், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சில போட்டியாளர்களிடையே பொறாமைகள், சண்டைகள் சூடு பிடித்துள்ள புரோமோ அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்த வாரம் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலையில் அடிபட்ட பெண் போட்டியாளர்
பிக்பாஸ் வீட்டில் விறு விறுப்பிற்கு பஞ்சமில்லாமல் கொண்டு செல்கின்ற ஒருவராகவும் மகேஸ்வரி வலம் வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடந்த டாஸ்க் ஒன்றில் வி.ஜே.மகேஸ்வரியின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வி.ஜே.மகேஸ்வரியின் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.