நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி : விளக்கம் கொடுத்த ரவீந்தர்

Marriage Ravindar Chandrasekaran
By Irumporai Sep 23, 2022 05:39 AM GMT
Report

அண்மையில் சன் டிவி புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் கன்னித்தீவுக்கு செல்ல உள்ளதாக வெளியான நிலைக்கு அதற்கு பதில் அளித்துள்ளார்.

மகாலெட்சுமி ரவீந்தர் திருமணம்  

தமிழ் திரை உலகில் பலரது திருமணங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் சமீபத்தில் சின்னத்திரை நட்சத்திரம் சன் டிவி புகழ் மகாலட்சுமி , திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியது.

நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி : விளக்கம் கொடுத்த ரவீந்தர் | Vj Mahalakshmi Husband Ravinder Chandrasekar

உடல் பருமனான இவரை மகாலட்சுமி திருமணம் செய்தது திரையுலகத்தினரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது. 

திருமணத்தை வைத்து வருமானம்

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த இந்த தம்பதியனை தூத்துக்குடி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் ரவீந்தர் சந்திரசேகர்.

கன்னித்தீவு பயணமா

ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல் எனக் கூறினார்.

நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி : விளக்கம் கொடுத்த ரவீந்தர் | Vj Mahalakshmi Husband Ravinder Chandrasekar

செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார். நான் டால்மியாபுரத்தில் உள்ள எனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன். நான் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி என கூறினார்.