மறைந்த சித்ராவின் கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்

heroine serial kil
By Jon Jan 19, 2021 05:38 PM GMT
Report

நடிகை சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கணவர் ஹேமந்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அவரது 10 ஆண்டுகால நண்பர் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேமந்தின் 10 ஆண்டு கால நெருங்கிய நண்பரான காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது ரோஹித் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஹேமந்த் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்ததாகவும், பல முறை எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார். தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு பெண்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்ததாகவும், அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை பொலிசார் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இதனிடையில் ஹேமந்தின் ஜாமீன் மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய பொலிசார் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.