மகள் துப்பட்டாவிலே துடிதுடிக்க உயிரைவிட்ட சித்ராவின் தந்தை - கடைசியாக சொன்ன அந்த வார்த்தை!
விஜே சித்ராவின் தந்தை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜே சித்ரா
சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில், அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார். பின் 2021ல் ஜாமீனில் வெளியே வந்தார்.
தொடர்ந்து ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ்(64) மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தந்தை மறைவு
உடனே, விரைந்து வந்து உடலை மீட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்ரா இறப்பதற்கு முன்பு ஆசை ஆசையாக கட்டிய வீட்டில்தான் அவருடைய குடும்பத்தினர் வசித்து வந்தனர். வழக்கமாக காலை நான்கு மணிக்கு சித்ராவின் தந்தை எழுந்து விடுவாராம்.
அதுபோல இன்றும் அவர் எழுந்திருக்கிறார். அப்போது அவருடைய மனைவி அவரிடம் காபி போடவா என்று கேட்டிருக்கிறார். வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். பிறகு சித்ராவின் அம்மா அந்த அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். சித்ராவின் அப்பா மட்டும் அந்த அறையில் இருந்து இருக்கிறார்.
காலை 7 மணிவாக்கில் சித்ராவின் அம்மா கதவை தட்டி பார்த்துள்ளார். கதவு திறக்கப்படவில்லை என்பதால் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு கதவை உடைத்து பார்த்த போது சித்ராவின் துப்பட்டாவில் அவர் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.