சித்ராவும் ஹேமந்தும் கல்யாணமே பண்ணிக்கல : காவல்துறை அதிகாரி பரபரப்பு தகவல்

Chitra V. J. Chitra
By Irumporai May 20, 2022 05:47 AM GMT
Report

மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணமே ஆகவில்லை என ஓய்வு பெற்ற காவல்த்துறை அதிகாரி திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளர் விஜே சித்ரா மரணமடைந்து ஒரு வருடம் கடந்தாலும் , அவரின் மரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது கடந்த சில நாட்களாக வெளியாகிவருகிறது.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. 

சித்ராவும் ஹேமந்தும் கல்யாணமே பண்ணிக்கல  : காவல்துறை  அதிகாரி பரபரப்பு தகவல் | Vj Chithra Not Married Retired Varatharajan

இந்த நிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான வரதராஜன் சித்ரா வழக்கு தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஹேமந்த் மற்றும் சித்ரா குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

அதில், ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் திருமணமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், சின்னத்திரை நடிகை சித்ராவை திருமணம் செய்யாமலேயே சூளைமேட்டில் உள்ளஒரு தனியார் ஹோட்டலில் திருமணம் செய்ததாக சார் பதிவாளர் அலுவலகத்தில் ஹேமந்த் 15000 ரூபாய் பணம் கொடுத்து பதிவு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணம் நடைபெற்றதாக ஹேமந்த் கொடுத்த சூளைமேடு ஹோட்டல் முகவரியில் அப்படி ஒரு ஹோட்டலே இல்லை. எல்லாமே பொய் என்றும் கூறியுள்ளார். சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணம் ஆகவில்லை என சித்ராவின் பெற்றோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து 5 மாதங்கள் ஆகிறது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மகளை இழந்த பெற்றோரை காவல் நிலையம், காவல் நிலையமாக அலைகழிக்கிறார்கள். கல்யாணம் ஆகவில்லை என்று நிரூபித்தால் சித்ராவின் சொத்துகள் அவருடைய அப்பா அம்மாவுக்கு போகும்.

சித்ராவும் ஹேமந்தும் கல்யாணமே பண்ணிக்கல  : காவல்துறை  அதிகாரி பரபரப்பு தகவல் | Vj Chithra Not Married Retired Varatharajan

புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார். ஹேமந்தின் மோசடி குற்றங்களுக்கு போலீஸ் துணை போகிறது என்றும் போலீஸால்தான் ஹேமந்த் தப்பித்து வருவதாகவும் ஓய்வு பெற்ற அதிகாரி வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜே சித்ராராவுக்கும் ஹேமந்துக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும் இருவரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.