மகளுடன் நடனமாடிய போது சுருண்டு விழுந்த அர்ச்சனா - ஆத்திரத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்!
தொகுப்பாளினி அர்ச்சனாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இவருக்கு திடீரென மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு தலையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளதால் அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் அர்ச்சனா தொகுப்பாளினியாக பயணத்தை தொடர முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நிலையில் மகள் மற்றும் தங்கையுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இதில் தலைவலி தாங்க இயலாமல் அங்கேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், இது தேவையா என தங்களது ஆத்திரங்களை கொட்டி வருகின்றனர்.