விஜே அர்ச்சனாவின் தற்போதைய நிலைமை - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

VJ Archana Biggboss archana Brain surgery Back to form
By Petchi Avudaiappan Sep 09, 2021 01:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் விஜே அர்ச்சனா படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

சன்டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமான அர்ச்சனா அதன்பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் ஈர்த்தார். 

இதனிடையே கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. பிறகு இதுதொடர்பாக பேசிய அர்ச்சனா தனக்கு தொடையில் 16 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் நீண்ட நேரம் நிற்க முடியாது எனவும் தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். 

மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15-16 மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இப்போதைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அர்ச்சனா படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூபில் பகிர்ந்துள்ள அர்ச்சனா ‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ என்று தெரிவித்துள்ளார். அர்ச்சனா கலந்துக் கொண்டது படமோ, சின்னத்திரை நிகழ்ச்சியோ இல்லை. அதுவொரு விளம்பர படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.