மருத்துவமனையில் சின்னத்திரை பிரபலம்: நடிகர் மனோபாலா வெளியிட்ட ட்வீட்

Vj archana Actor manobala
By Petchi Avudaiappan Jul 11, 2021 02:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

தமிழில் பிரபல தொகுப்பாளினியாக திகழும் அர்ச்சனா, பிக்பாஸ் -4 வது சீசனில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

இதனிடையே தனக்கு மூளையில் திரவ கசிவு ஏற்பட்டதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு வார காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின்னர் வீடு திரும்புவேன்.

மேலும் எனது மகள் ஸாரா உடல் நலம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிப்பார் என அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நாங்க எல்லாம் இருக்கோம் அர்ச்சும்மா.. கடவுள் சாய்ராம் இருக்காரு.. உங்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிந்தது என கேள்விப் பட்டேன். அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்பட்டு நீங்கள் அழுதீர்கள் எனவும் கேள்விப் பட்டேன்.

அழ வேண்டாம். அது உங்களுக்கு செட்டாகாது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவீர்கள் என நடிகர் மனோபாலா ஆறுதல் கூறியுள்ளார்.