vj அஞ்சனாவை கீழ்த்தரமாக பேசிய நபர் - கொதித்த கணவர்: என்ன நடந்தது?

issue Anjana Rangan Chandran
By Anupriyamkumaresan Sep 28, 2021 01:31 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

இன்ஸடாகிராமில் விஜே அஞ்சனாவின் பதிவில் அப்யூசிவாக கமென்ட் செய்த நபரின் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கச்சொல்லி அவரது கணவர் கயல் சந்திரன் டேக் செய்துள்ளார்.

சன் மியூஸிக் சேனலில் விஜேவாக கேரியரை தொடங்கியவர் அஞ்சனா. பல ஆண்டுகள் சன் மியூஸிக்கில் விஜேவாக பணிபுரிந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் ஏகப்பட்ட இசை வெளியிட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான விழாக்கள் உட்பட கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே அஞ்சனாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர். பின்னர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சமூக வலைதளங்களில் அஞ்சனா ரங்கன் பிரபலம் என்பதால் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ் குவிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

vj அஞ்சனாவை கீழ்த்தரமாக பேசிய நபர் - கொதித்த கணவர்: என்ன நடந்தது? | Vj Anjana Abuse By People Kayal Chandran Angry

நடிகை அஞ்சனா அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் உரையாடி வருவார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவன் அஞ்சனாவிடம், 'நீங்கள் நடிகையா வரலாமே, உங்கள் கணவர்தான் திரைத்துறையில் பீல்ட் அவுட்டாகி கிடக்குறாரே, நீங்க நடிகையானால் அவருக்கு உதவியாக இருக்கும்' என குறிப்பிட்டு, அஞ்சனாவின் கணவர் கயல் சந்திரனையும் டேக் செய்துள்ளார்.

இந்த கமெண்ட்களால் ஆத்திரமடைந்த கயல் சந்திரன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த பதிவை பார்த்த சந்திரன் அந்த பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'இந்த நபர் சமூகவலைத்தளங்களில் பல பெயர்களை வைத்து, சில மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்.

முகம் தெரியாத இடியட், உன்னை எச்சரிக்கிறேன்' என பதிவு செய்து சென்னை போலீஸ் சமூகவலைதள பக்கத்தை டேக் செய்துள்ளார். "இவர் போன்ற முகம் தெரியாத நபர்கள் பலரும் நாகரீகம் தெரியாமல் கமெண்ட்ஸ் செய்வது கவலையாக இருக்கிறது. இவர் தன்னுடைய வீட்டில் உள்ள பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த மாட்டார் என நம்புகிறேன்.

இன்னும் சில நாட்களில் இவர் போலீசில் பிடிப்படுவார் என்று எச்சரிக்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து நெட்டிசனின் இந்த பதிவை பார்த்து கடுப்பான அஞ்சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “உனக்கெல்லாம் வேலை வெட்டி இருக்குல மூடிக்கிட்டு வேலைய பாரு, அபியூஸ் பண்றதுதான் உன் முழு நேர வேலையா? 'உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்காப்பா, உன்னை பெத்ததுக்கு' என கோபமாக பதிவிட்டுள்ளார்.

அஞ்சனா தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சண்டே கொண்டாட்டம் என்ற ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.