90’ஸ் கிட்ஸின் பிரபல விஜே நடிகர் ஆனந்தக் கண்ணன் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

RIPanandakannan AnandaKannan
By Petchi Avudaiappan Aug 17, 2021 12:27 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல விஜே, நடிகர் ஆனந்த கண்ணன் திடீரென மரணம் அடைந்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

1990-2000 ஆம் காலக்கட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற விஜேவாக திகழ்ந்த ஆனந்த கண்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்து பிரபலமானார்.

48 வயதான அவர் கிராமியக் கலைகள் மீதான ஆர்வத்தால் சிங்கப்பூரில் குடியேறி தான் கற்ற பாரம்பர்ய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக அந்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார்.

இந்நிலையில் தான்  ஆனந்த கண்ணன் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்தகண்ணனுக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.