என் தந்தையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி: மிக உருக்கமாக பதிவிட்ட விவேக்கின் மகள்

awards vivekh siima best comedy actor
By Fathima Sep 23, 2021 06:11 PM GMT
Report

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி காலமானார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டே நாட்களில் விவேக்கின் திடீர் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.

ஆனால் கொரோனா தடுப்பூசிக்கும், விவேக் மரணத்துக்கும் தொடர்பில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்தார்.

தற்போது இது தொடர்பான வழக்கொன்று கொடுக்கப்பட்டு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல விருது வழங்கும் நிகழ்ச்சியான SIIMA வில் நடிகர் விவேக்குக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விவேக்கின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவரது மகள், எனது தந்தையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி, தாராள பிரபு படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருது கிடைத்துள்ளது.

இந்த விருதை வாங்கி, எங்களிடம் கொண்டுவந்து சேர்ந்த யோகிபாபு அண்ணாவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.