விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை: தமிழக அரசு அறிவிப்பு

மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு அனுமதி தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது.

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நடிகர் விவேக்கின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும்.

இதன் காரணமாக  விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல் துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது தமிழக அரசு.

இந்த நிலையில் தற்போது விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விருதுகளை பெற்ற விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் அவரது கலை, சமூக சேவையை கெளரவிக்கும் விதமாகவும் காவல்துறை மரியாதை அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்