விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை- விளக்கம் கொடுத்த சீமான்
விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவு மாதத்தின் தொடக்க நாளான இன்று, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், நிகழ்ச்சி நடைபெற்றது.
.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், இந்த ஒரு மாதத்தை இனப்படுகொலை மாதமாக அனுசரிப்பதாகதெரிவித்தார்.
தொடர்ந்து நடிகர் விவேக்கின் இறப்பு குறித்து பேசிய சீமான்தாம் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றும். தாம் விசாரித்தவரை விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்னை இருந்துள்ளது என்றும் அதற்கு தடுப்பூசி காரணமில்லை என விளக்கமளித்தார்.
ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணமில்லை எனத் தெரிவித்தார்.