நண்பர் விவேக் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் - ரஜினிகாந்த் ட்விட்
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்தது.
விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவரது உதவியாளர் நிகில் முருகன் தெரிவித்தார்.
அனைவரையும் சிரிக்கவைத்து மகிழ்ந்த விவேக் விரைவில் நலம்பெற வேண்டுமென அவரது ரசிகர்களும் திரைபிரபலங்களும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம் IBC Tamil