அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் - ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மக்களிடையே சந்தேகங்கள் வலுத்து வருகின்றன. தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற கேள்விகளை அரசை நோக்கி சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் இறப்புக்கும் எந்தக் காரணமும் கிடையாது என்று விளக்கம் கொடுத்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் பிரகாஷ் பேசுகையில், தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும். நடிகர் மன்சூர் அலி கான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டர்கள் குணமடைந்து 8 வாரங்களுக்குப் பிறகுதான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இணை நோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படியே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.