அன்புச் சகோதரர் நடிகர் விவேக் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓபிஎஸ்
பிரபல நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
நேற்று அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், நடிகர் விவேக்கிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விவேக்கிற்கு மூச்சுத்திணறல் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) April 16, 2021
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.