பிரதமர் மோடியின் தனிச்செயலாளர் இவர்தானா? - என்னென்ன அதிகாரம் உள்ளது?

Narendra Modi Government Of India
By Petchi Avudaiappan May 21, 2022 09:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.ஐ. அதிகாரி விவேக் குமாரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பாரத பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி சஞ்சீவ் குமார் சிங்க்ளா இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 1997 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். அதிகாரியாக பதவியேற்ற சஞ்சீவ் குமார் சிங்க்ளா இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவில் உள்ள இந்திய தூதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே அவரது பணியிடமாற்றத்தால் விவேக் குமார் பிரதமரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான விவேக் குமார் தற்போது பிரதமர் அலுவலக இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இந்திய கேபினட் நியமனக்குழு விவேக் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமருடைய தனிச்செயலாளர்தான் இந்தியாவின் மூத்த அதிகாரியாகவும், பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக அதிகாரத்தையும் பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.