விவேக் என்னுடன் நடிக்காதது வருத்தமளிக்கிறது - கமல் ஹாசன் உருக்கம்

death kamal sad vivek
By Praveen Apr 17, 2021 03:55 PM GMT
Report

மரங்களை விதைத்து மனங்களில் முளைத்த ஜனங்களின் கலைஞனுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், "விவேக் போன்ற கலைஞர்கள் இன்னும் தோன்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, விவேக் போன்ற கலைஞர்கள் மீண்டும் உருவாக வேண்டும், சென்றுவா விவேக். இருவரும் ஒரே பள்ளியில் படித்து திரையுலகிற்கு வந்தவர்கள்.

விவேக்கிற்கு பிறகு அவர் விட்டு சென்ற விதைகள் மரமாக வளரும். இன்னும் எஞ்சிய பணிகள் நிறைய இருக்கும்போது அவர் சென்றது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. ஒரே குருவிடமிருந்து வந்த நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்காத வருத்தம் விவேக்கிற்கு இருந்தது.

கலைஞர்கள் மக்களுக்காக வாழ்க்கையை அர்பணிக்க வேண்டும் என்பதற்கு பெரிய எடுத்துக்காட்டு விவேக். இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார்" எனக் கூறியுள்ளார்.