விவேக் இல்லை என்பதை நம்ப முடியவில்லை- பிரபலங்கள் உருக்கம்
எங்கள் விவேக் எங்களுடன் இல்லை என்பதை என் இதயம் நம்ப மறுக்கிறது என டுவிட் செய்துள்ளார் பிரபல இசையமைப்பாளரான டி.இமான்.
நேற்று வீட்டிலிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சிம்ஸ் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு, எக்மோ உதவியுடன் சிகிச்சைகள் நடந்து வந்தாலும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவரது இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
டி.இமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது, ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம், அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
My heart and soul refuses to believe the fact that our Vivek sir is no more..
— D.IMMAN (@immancomposer) April 17, 2021
What an extraordinary artist and a human we had lost..
My heartfelt condolences to his close knit family..#RIPVivekSir