நடிகர் விவேக்கின் நிலை குறித்து வருத்தப்பட்ட கேப்டன்!
நேற்று நடிகர் விவேக் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இன்று காலை அவர் ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்றுவிட்டு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது, குடும்ப உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தார் சேர்த்தனர்.
மருத்துவமனையில் நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நடிகர் விவேக் பூரண நலம் பெற்று திரும்பி வர வேண்டும் என்று திரையுலகினரும், அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திக் கேட்டு நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கவலையடைந்துள்ளார். நடிகர் விவேக் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தழுதழுத்த குரலில் தெரிவித்துள்ளார்.
