விவேக் மறைவு எனக்கும், தமிழ் சினிமாவுக்கும் மாபெரும் இழப்பு: நடிகர்விக்ரம்

vivek vikram ripvivek
By Irumporai Apr 17, 2021 06:06 AM GMT
Report

 நடிகர் விவேக்கின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என விக்ரம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரைப்பிரபலங்களும் பல அரசியல் தலைவர்களும், இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் அறிக்கையின் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரதுஅறிக்கையில்:

" என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.