‘‘தனது நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்தவர் நடிகர் விவேக்’’- பிரதமர் மோடி இரங்கல்

vivek ripvivek
By Irumporai Apr 17, 2021 07:41 AM GMT
Report

 நடிகர் விவேக் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நடிகர் விவேக்,ச தனது நகைச்சுவையில் புத்திசாலித்தனமான கருத்துக்களை சொல்லக்கூடியவர்.

தனது நகைச்சுவையால் ஏராளமான மக்களை மகிழ்வித்தவர்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரைப்படங்களிலும் சூழலியல் பாதுகாப்பை வலியுறுத்திவர்.

விவேக்கின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

 நடிகர் விவேக்கின் மறைவினால் அவரது  ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும்  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

‘‘தனது நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்தவர் நடிகர் விவேக்’’- பிரதமர் மோடி இரங்கல் | Vivek Death Tamilnadu Modi