நடிகர் விவேக் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முக ஸ்டாலின்
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தாருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்புக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி கடந்த ஏப்ரல் 17ம் தேதி உயிரிழந்தார்.
அவரது மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை இரங்கல் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் விவேக் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள விவேக் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றார். விவேக் குடும்பத்தினருக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.