நடிகர் விவேக்கிற்கு மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு- பிரபலங்கள் இரங்கல்

viveak ripviveak
By Irumporai Apr 17, 2021 03:22 AM GMT
Report

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  நேற்று அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் மோசமானதால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார். இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு- பிரபலங்கள் இரங்கல் | Viveak Death

அவரின் மறைவிற்குபல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் மறைவினை நம்ப முடியவில்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

  அதே போல் நடிகர்கள் மயில்சாமி, யோகி பாபு, ஆனந்தராஜ், நடிகை கஸ்தூரி என ஏராளமான நடிகர்கள் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.