பிடி உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழ்நாட்டின் வித்யா ராமராஜ்

Tamil nadu Coimbatore Japan
By Karthikraja Sep 28, 2026 02:02 PM GMT
Report

vidhya ramraj wons bronze in 400m hurdles breaks pt usha 42 years record: ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றுள்ள தமிழ்நாட்டின் வித்யா ராமராஜ், தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

வெண்கலம் வென்ற வித்யா ராமராஜ்

20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயதான வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார்.  

பிடி உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழ்நாட்டின் வித்யா ராமராஜ் | Vithya Ramraj Break Pt Usha 42 Record 400M Hurdles

இறுதிப்போட்டியில், 54.75 விநாடிகளில் இலக்கை கடந்த வித்யா ராம்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பிடி உஷாவின் 42 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

இதன் மூலம், தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை வித்யா முறியடித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிப்போட்டியில் பி.டி. உஷா 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. 

பிடி உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழ்நாட்டின் வித்யா ராமராஜ் | Vithya Ramraj Break Pt Usha 42 Record 400M Hurdles

கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 55.42 விநாடிகளை சமன் செய்த வித்யா ராம்ராஜ், தற்போது அதை விட குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்த அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் 54.31 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் அதெலினா ஜெம்ஸ் 54.58 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். 

26 வயதான கோயம்புத்தூரை சேர்ந்த வித்யாவிற்கு இது நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் ஆகும்.

முன்னதாக நடைபெற்ற 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டப் பிரிவில் (Mixed 4x400m Relay), வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.   

பதக்கம் வென்ற வித்யா ராமராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.