மின் வெட்டுக்கு அணில் தான் காரணம் என்று எனக்கு தெரியவில்லை! நத்தம் விஸ்வநாதன் பேச்சு..
7 வருடம் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தும் மின்வெட்டுக்கு காரணம் அணில் தான் என்று எனக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் திறந்துவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரிக்க முடியாதது மின்வெட்டும் திமுக ஆட்சியும் தான் என்ற அவர், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக 7 வருடங்கள் இருந்து உள்ளேன். ஆனால் மின்வெட்டுக்கு காரணம் அணில் தான் என்று எனக்கு தெரியவில்லை எனக் கூறினார்.
மேலும் நீட் தேர்வு பற்றியும்.நீட் தேர்வு இருக்கா? இல்லையா? என்று விரிவான விளக்கம் இல்லாமல் இன்று வரை மாணவர்களின் வாழ்கையில் திமுக விளையாடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
அதோடு திமுக ஆட்சிக்கு வந்தாலே அராஜகம் தான் செய்யும் என்பதை மக்களே தெரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.