நார்வே செஸ் போட்டி - விஸ்வநாதன் ஆனந்த் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்
By Nandhini
இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டியில் முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். இத்தொடரின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், நார்வே செஸ் போட்டியில் 3வது சுற்றில் சீனாவை சேர்ந்த வாங் ஹாவோவை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்த் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துள்ளார்.