பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோவில் பிரமிக்க வைத்த இளம் பெண்கள்...!
குஜராத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோவில் இளம் பெண்கள் மாஸா நடந்து பிரமிக்க வைத்துள்ளனர்.
பிரமிக்க வைத்த இளம் பெண்கள்
குஜராத், ராஜ்கோட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற இளம் பெண்களின் நடை அனைவரையும் கவர்ந்துள்ளது. ராஜ்கோட்டில் லக்மே பேஷன் ஷோவில் இளம் பெண்கள் திகைப்பூட்டும் வகையில் ராம்ப் வாக் செய்து அசத்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

#WATCH Gujarat: Visually impaired girls walk the ramp at the Lakme fashion show organized by Institute of Fashion and Jewellery Design, in Rajkot yesterday pic.twitter.com/IiYn0l74M2
— Breaking News (@feeds24x7) December 19, 2022