முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை - திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை

M K Stalin Government of Tamil Nadu Tiruchirappalli
By Thahir Dec 29, 2022 01:44 AM GMT
Report

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ட்ரோன்கள் பறக்க தடை 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

visit-cm-mk-stalin-ban-on-flying-drones-in-trichy

மேலும், தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.