இது நம்ம செஸ் நம்ம சென்னை : விஸ்வநாதன்ஆனந்த் பெருமிதம்

Chess 44th Chess Olympiad
By Irumporai Aug 09, 2022 10:01 PM GMT
Report

சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதது என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்

செஸ் ஒலிம்பியாட்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இது  நம்ம செஸ் நம்ம சென்னை  :  விஸ்வநாதன்ஆனந்த் பெருமிதம் | Vishwanathan Anand Speech At 44Th Chess Olympiad

இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்டு செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றினார்.

நம்ம செஸ் நம்ம சென்னை

அப்போது இந்தியன் மற்றும் சென்னையை சேர்ந்தவன் என்ற பெருமையுடன் இங்கு நிற்கிறேன். நேப்பியர் பாலம் முதல் பால்பாக்கெட் வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டிக்கான பணியாற்றிய தன்னார்வலர்கள், சிரித்த முகத்துடன் தங்களது வேலையை செய்தனர்.

செஸ் விளையாடத் தொடங்கும் போது நான் ஒரு நாள் சாம்பியன் ஆவேன் என நினைத்து விளையாடினேன். ஆனால் சென்னையும் செஸ் விளையாட்டு இந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

சென்னையும் செஸ் விளையாட்டும் தற்போது பிரிக்க முடியாத ஒன்று. நம்ம செஸ் நம்ம சென்னை” எனத் தெரிவித்துள்ளார்.