ஆசிய போட்டிகள்..தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை..சாதனை படைத்த தமிழன்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளின் பாய்மர விளையாட்டு பிரிவில், தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள்
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியின் 3ஆவது நாள் போட்டியின்போது, இந்தியா வீரர்கள் இன்றும் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். குதிரையேற்றப் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு நேற்று ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருந்தது.
இதனால் 3ஆம் நாள் முடிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. துப்பாக்கிச் சுடுதல் மகளிர் குழு 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரபல வீராங்கனை மனு பாக்கர், ரிதம் சங்க்வான், ஈஷா சிங் குழுவினர் 1,759 புள்ளிகள் பெற்று தங்கத்தை வசப்படுத்தினர்.
அசத்திய தமிழக வீரர்
இதேபோல் 50 மீட்டர் மகளிர் குழு ரைபிள் போட்டியில் வீராங்கனைகள் Ashi Chouksey, Sift Samra Kaur, Manini Kaushik ஆகியோர் 1,764 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர் அசத்தியுள்ளார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தனிப்பிரிவில் இந்தியாவின் வீராங்கனை ஈஷா சிங் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தொடரில் ஆண்கள் பாய்மர விளையாட்டு போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் 34 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியிருகின்றார். இன்று காலை நிலவரப்படி இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில், இதுவரை மொத்தமாக 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 புத்தகங்களுடன் புள்ளிபட்டியலில் 6-வது இடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.