திருமணத்திற்கு முன்பே முதலிரவு; பகீர் கிளப்பிய கணவன் - சம்யுக்தா பதிலடி!
திருமணத்திற்கு முன்பே தங்களுக்கு முதலிரவு நடந்து விட்டதாக விஷ்ணுகாந்த் தெரிவித்துள்ளார்.
தொடர் குற்றச்சாட்டு
சின்னத்திரை நடிகர்கள் ஆன சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சில மாதங்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
அதன் வரிசையில் விஷ்ணுகாந்த் அளித்த பேட்டி ஒன்றில், இருவருக்கும் திருமணத்திற்கு முன்பு முதல் இரவு நடந்து விட்டதா என்ற கேள்விக்கு விஷ்ணுகாந்த் ஆமாம் என்பது போல தலையாட்டி பதில் அளித்துள்ளார்.
சம்யுக்தா பதிலடி
அப்போது உங்களுக்கு ஏற்கனவே அது முடிவு அடைந்து இருந்தால் பிறகு எதற்காக முதல் இரவு உங்கள் வீட்டில் தான் வைக்க வேண்டும் என்று நீங்கள் பிரச்சனை செய்தீர்கள் என்றும் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தா விஷ்ணுகாந்திற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு பெண்ணை களங்கப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய கேரக்டரை தான் சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.
இது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என்ன நடந்தது என்று அதற்கான பதிலும் தருவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.