தளபதி என்றால் அது விஜய் மட்டும்தான்... - நான் புரட்சித் தளபதி இல்லை ... - நடிகர் விஷால் பேச்சு...!

Vijay Vishal
By Nandhini Dec 13, 2022 08:56 AM GMT
Report

தளபதி என்றால் அது விஜய் மட்டும்தான். நான் புரட்சித் தளபதி இல்லை என்று நடிகர் விஷால் பேசியுள்ளார்.

‘லத்தி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக நடிகர் விஷால் வலம் வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து முடித்துள்ள ‘லத்தி’. இப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

vishal-vijay-laththi-movie

தளபதி என்றால் அது விஜய் மட்டும்தான்

இந்நிகழ்ச்சில் நடிகர் விஷால் பேசுகையில், லத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்தியில் ஒரு வாரம் கழித்து வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜை பார்த்து சந்தோசமாகவும் இருக்கிறது. அதேசமயம் பொறாமையாகவும் இருக்கிறது. உங்களை போலவே நடிகர் விஜய் வைத்து கடவுள் புண்ணியத்தில் ஒரு நல்ல கதையை நானும் இயக்குவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

அப்போது, விஷால் பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து ரசிகர் ஒருவர் புரட்சி தளபதி என்று கத்தி கூச்சலிட்டார். அப்போது பேசிய விஷால், இல்லை... இல்லை... தளபதி என்றால் அது அவர்தான். நான் புரட்சி தளபதிலாம் கிடையாது. என் பெயர் விஷால் மட்டுமே என்று பேசினார்.