புது கட்சி துவங்குகிறேன்...2026 தேர்தலே குறி - அதிரடியாக அறிவித்த விஷால்
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
விஷால்
நடிகர் விஷாலும் அரசியலில் கால் பாதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் நிலையில் அது குறித்து அறிக்கையும் சில மாதங்கள் முன்பு வெளியிட்டார்.
அதில், நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை என்றும் வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புது கட்சி
இந்நிலையில் தான், தற்போது புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தான் 2026-ஆம் வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் புது கட்சி துவங்கி தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய நாளில் இருந்து அடுத்து இந்த நடிகர் வருவாரா..? அந்த நடிகை களமிறங்குவாரா..? என்றெல்லாம் சகட்டுமேனிக்கு திரையுலகம் பக்கம் அரசியல் வெளிச்சம் திரும்பியது. ஆனால், யாரும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை.