முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!
நடிகர் விஷால் முதல்வர் விஜய்யை சந்தித்தபோது வழக்கமான பரிசுகள் வழங்காமல், மூன்று ஏழை மாணவிகளின் கல்லூரிக் கல்விக்கான முழு செலவையும் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு விஷாலின் பரிசு
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சினிமா, அரசியல், தொழில் உள்ளிட்ட பல துறைகளின் பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான சந்திப்புகள் பூங்கொத்து அல்லது நினைவுப் பரிசு வழங்கும் மரியாதை நிமித்தமானதாகவே அமைந்துள்ளன. ஆனால் நடிகர் விஷால் மேற்கொண்ட சந்திப்பு சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய்யை சந்திக்கும்போது அவர் வழக்கமான பரிசுகள் எதையும் கொண்டு செல்லவில்லை. அதற்கு பதிலாக, மூன்று ஏழை மாணவிகளின் கல்லூரிக் கல்விக்கான முழு செலவையும் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
இந்த மாணவிகள் அனைவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவருக்கு single parentன் மகள், , மற்றொருவர் தினக்கூலி மற்றும் தொழிலாளியின் மகள்.மூவரும் தங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக உருவாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

இந்த உதவி வெறும் நிதியுதவியாக அல்லாமல், அவர்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கிய முதலீடாக பார்க்கப்படுகிறது.
விஷால் முதல்வரிடம் வழங்கிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த கருத்தும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது: “பூக்கள் சில மணி நேரங்களில் வாடிவிடலாம். ஆனால் ஒரு குழந்தையின் கல்விக்கு செய்யப்படும் உதவி பல தலைமுறைகளுக்கு ஒளி கொடுக்கும்.” இந்தச் செயல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இதை சாதாரண மரியாதை சந்திப்பாக அல்லாமல், சமூகப் பொறுப்புடன் கூடிய செயல் எனக் குறிப்பிடுகின்றனர். புகைப்படத்திற்காக நடைபெறும் சந்திப்புகளுக்கு மத்தியில், கல்வி உதவியை முன்னிலைப்படுத்திய இந்த முயற்சி சமூக ஊடகங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் சமூக சேவகராகவும் செயல்படும் விஷால், இந்த நடவடிக்கையின் மூலம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரின் செலுக்கு முதல்வரும் பாராட்டுக்களையும்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு IBC Tamil