கீர்த்தி சுரேஷை பெண் கேட்ட விஷாலின் பெற்றோர் - கீர்த்தி என்ன சொன்னார் தெரியுமா?
விஷாலுக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது பேபி ஜான் என்ற படம் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
விஷாலின் பெற்றோர்
சில நாட்களுக்கு முன் தனது காதலருடன் உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினார். அத்தோடு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற அவர் டிசம்பர் மாதம் தனக்கு கோவாவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷை விஷாலின் பெற்றோர் பெண் கேட்டதாகவும் அதற்கு கீர்த்தி மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான தகவலை நடிகர் சித்ரா லட்சுமனன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சண்டைக்கோழி 2 படப்பிடிப்பின் போது, கீர்த்தி சுரேஷை பார்த்த விஷாலின் பெற்றோருக்கு அவரை ரொம்பவும் பிடித்து, விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு நெருக்கமான இயக்குநர் லிங்குசாமி மூலம் இந்த விசயத்தை டீல் செய்துள்ளனர். லிங்குசாமி இது குறித்து கீர்த்தி சுரேஷிடம் தெரிவித்த போது, தனக்கு ஏற்கனவே காதலர் இருப்பதாகவும் அவரைதான் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.