மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த விஷால் - எதற்காக தெரியுமா?
எனிமி திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் விஷால் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் நாளை தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இதனிடையே சென்னையில் ’எனிமி’ படக்குழு புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.
நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை.
திருப்பதி சென்ற அவர் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அவன் இவன் படத்திற்கு மீண்டும் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.