திரைத்துறைக்கு ஆக்சிஜன் கிடைக்கட்டும்! உதயநிதி நண்பன் விஷாலின் வாழ்த்து செய்தி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதால், ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

இதனைதொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷால் டுவிட்டரில், அற்புதமான வெற்றி பெற்ற திமுகவுக்கு வாழ்த்துக்கள், என் நெருங்கிய நண்பர்களான உதயநிதி, அன்பில் மகேஷ்க்கு வாழ்த்துக்கள்.

அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல விடயங்கள் நடக்கும், உடைந்து போயிருக்கும் சினிமா துறைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்