லஞ்சம் கேட்டதாக புலம்பிய விஷால்...கிடுக்குப்புடி போட்ட மத்திய அரசு..!!

S J Surya Vishal Tamil Cinema Tamil Actors
By Karthick Sep 29, 2023 09:58 AM GMT
Report

தன்னிடம் லஞ்சம் கேட்டதாக சென்சார் போர்டு மீது நடிகர் விஷால் புகாரளித்திருந்த நிலையில், தற்போது அவரின் குற்றச்சாட்டிற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப பிரிவு பதிலளித்துள்ளது.

விஷால் புகார் 

அண்மையில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் “மார்க் ஆண்டனி”. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இப்படம் தமிழை தாண்டி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

vishal-cbfc-case-central-government-tweet

பான் இந்திய படமாக இந்தி, மலையாள, கன்னட மொழி படங்களிலும் வெளியான இப்படம், இது வரை 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து நடிகர் விஷால் அண்மையில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவர், படத்தை சென்சார் செய்யும் போது, CBFC மும்பை அலுவலகத்தில் ஹிந்தி வெளியீட்டுக்கு 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது என குறிப்பிட்டு, இரண்டு பரிவர்த்தனைகளாக இப்பணத்தை அனுப்பியதாகவும் தெரிவித்து திரைப்படம் திரையிடலுக்கு மூன்று லட்ச பணமும், சான்றிதழுக்கு 3.5 லட்ச பணமும் கொடுக்கப்பட்டதாக தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பினார்.

நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு

மேலும், அந்த வீடியோவில், இதனை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக விஷால் குறிப்பிருந்த நிலையில், வீடியோ பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், இதற்க்கு தற்போது மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செய்தியில் CBFC ஊழல் குறித்து விஷாலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டு, ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றும் இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என பதிவிட்டுள்ளது.