லட்சுமி மேனனுடன் திருமணமா? கண்டிப்பா நடக்கும், அந்த நேரத்தில் நடக்கும் - விஷால் பதில்!

Vishal Lakshmi Menon Tamil Cinema Actors Tamil Actors
By Jiyath Sep 22, 2023 03:30 PM GMT
Report

மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஷால் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

நடிகர் விஷால்

நடிகர் விஷால் மற்றும் நடிகை லட்சுமி மேனன் ஜோடியாக பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று அன்று முதலே கிசுகிசுக்கள் எழுந்துவருகிறது.

லட்சுமி மேனனுடன் திருமணமா? கண்டிப்பா நடக்கும், அந்த நேரத்தில் நடக்கும் - விஷால் பதில்! | Vishal About Lakshmi Menon Marriage Controversy

இதுகுறித்து மறுப்பு தெரிவித்து விஷாலும் தனது ட்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்ஜெ சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார்.

லட்சுமி மேனனுடன் திருமணமா? கண்டிப்பா நடக்கும், அந்த நேரத்தில் நடக்கும் - விஷால் பதில்! | Vishal About Lakshmi Menon Marriage Controversy

அப்போது விஷாலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் "19 வருடம் ஆகிவிட்டது. இப்போது உங்கள் கல்யாணம் குறித்து நீங்கள் அறிவிக்கலாமே. இதுவரை நிறைய ஹீரோயின்களுடன் நடித்துள்ளீர்கள். ஆனால் ஒரு ஹீராயினுடனும் காதல் வரவில்லையா?உங்களை நிறைய ஹீரோயின்களுடன் தொடர்பு படுத்தி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அப்பப்போ நீங்கள் ட்விட்டரில் பதில் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார் .

பேட்டி

அதற்கு பதிலளித்த விஷால் "ஒரு தடவை மட்டும்தான் நான் டிவீட் போட்டேன். லட்சுமி மேனனுக்காக மட்டும்தான். ஏனெனில் அவர் ஒரு பெண்மணி. என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.

லட்சுமி மேனனுடன் திருமணமா? கண்டிப்பா நடக்கும், அந்த நேரத்தில் நடக்கும் - விஷால் பதில்! | Vishal About Lakshmi Menon Marriage Controversy

என்னிடமே வந்து விஷால் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டால், நானே நேரம், தேதி, கலாம் எல்லாம் சொல்லிவிடுவேன். அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணுடன் தொடர்பு படுத்தி எழுதாதீர்கள். அவர்களின் வாழ்க்கையை தேவையில்லாமல் இதில் இழுத்து விடாதீர்கள்.

அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. இதனால் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் கெட்டுவிடும். என்னுடைய கல்யாணம் என்பது கண்டிப்பா நடக்கும். அந்த நேரத்தில் நடக்கும். கடமைகள் இருக்கிறது, அதை முடித்துவிட்ட பின்னர் நடக்கும் என்று விஷால் பேசியுள்ளார்.