ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய மாணவி உயிரிழந்தார்...!
ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே மாணவி சிக்கிய மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கி கொண்ட மாணவி மரணம்
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த 7ம் தேதி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே மாணவி ஒருவர் சிக்கிக்கொண்டார்.
அவரை மீட்ட பலர் முயற்சி செய்தனர். ஆனாலும், அந்த மாணவியால் வெளியே வர முடியவில்லை. வலி தாங்க முடியாமல் அந்த மாணவி அழுது கதறினார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரயில்வே ஊழியர்கள் அந்த மாணவியை காப்பாற்றினர்.
மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மாணவி தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.